LOADING...
கின்னஸ் சாதனையில் 'துரந்தர்' படப் பாடல்: பஹ்ரைன் ராப்பர் பிளிப்பராச்சிக்கு கிடைத்த கௌரவம்
'Fa9la' பாடலை பாடிய பஹ்ரைன் நாட்டு ராப்பர் பிளிப்பராச்சிக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது

கின்னஸ் சாதனையில் 'துரந்தர்' படப் பாடல்: பஹ்ரைன் ராப்பர் பிளிப்பராச்சிக்கு கிடைத்த கௌரவம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 01, 2026
04:01 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா நடித்த 'துரந்தர்' திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், தற்போது கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற 'Fa9la' பாடலை பாடிய பஹ்ரைன் நாட்டு ராப்பர் பிளிப்பராச்சிக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. ஒரே நேரத்தில் பில்போர்டு அரேபியா (Billboard Arabia) தரவரிசையில் நான்கு வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்ததற்காக இந்த கின்னஸ் உலக சாதனை வழங்கப்பட்டுள்ளது.

சாதனை

கின்னஸ் உலக சாதனை என்ன?

1. டாப் 100 கலைஞர்கள் (Top 100 Artists) 2. ஹாட் 100 பாடல்கள் (Hot 100 Songs) 3. டாப் 50 கலீஜி (Top 50 Khaleeji) 4. டாப் 50 அரபு ஹிப் ஹாப் (Top 50 Arabic Hip Hop) ஆகிய நான்கு பிரிவுகளிலும் இப்பாடல் முதலிடம் பிடித்துள்ளது. உண்மையில் இந்தப் பாடல் 2024-லேயே வெளியானது. ஆனால், 2025 டிசம்பரில் வெளியான 'துரந்தர்' படத்தில், இது பயன்படுத்தப்பட்டது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலானதால், அரபு மொழியில் அமைந்த இந்தப் பாடலும் உலகெங்கும் பிரபலமானது.

ரியாக்ஷன்

பிளிப்பராச்சியின் ரியாக்ஷன்

தனது கின்னஸ் சான்றிதழை பெற்றுக்கொண்ட பிளிப்பராச்சி, "ஹிந்தி தெரியாத ஒரு மொழியில் இந்தப் பாடல் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு 'அணு வெடிப்பு' போன்ற உணர்வைத் தருகிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். துரந்தர் திரைப்படம் ஏற்கனவே ₹1,300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இந்த பாடலும் உலக சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.

Advertisement