
'தல' தோனி தயாரிப்பில், LGM படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் வீரர், தோனி திரைப்படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
தோனி என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் முதல் படமாக, தோனியை 'தல' எனக்கொண்டாடும், தமிழ் ரசிகர்களுக்காக எடுக்க அவர் முடிவெடுத்தார்.
இதனை தொடர்ந்து, அவரின் மனைவி சாக்ஷி தோனி எழுதிய கதையே திரைப்படமாக மாற்ற முடிவெடுத்து, அந்த படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவுற்றது.
இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்க, ஹரிஷ் கல்யாண், நதியா, இவனா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதற்காக தோனியும், அவரது மனைவியும் வருகை தந்திருந்தனர்.
அப்போது பேசிய தோனி, நான் மிகவும் நேசிக்கும் தமிழ்நாட்டிலேயே, தமிழ் மொழியிலேயே எனது முதல் தயாரிப்பு அமைந்திருப்பது எனது அதிர்ஷ்டம் எனக்கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
LGM பாடல் வெளியீட்டு விழா
#LGM Audio was launched by #MSDhoni💛🎶 pic.twitter.com/1S0u22dVhn
— AmuthaBharathi (@CinemaWithAB) July 10, 2023