திரைப்பட நடிகைகளை குறி வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு, திவ்யா ஸ்பந்தனா பதிலடி
சினிமா நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர் திவ்யா ஸ்பந்தனா. பல சந்தர்ப்பங்களில், சர்ச்சையான கருத்துகளையும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், நடிகைகளை குறி வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி தரும் விதமாக, ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய் பல்லவி அரசியல் ரீதியாக தனது கருத்தை தெரிவித்ததற்காகவும், ராஷ்மிகா மந்தனா தனது கருத்தை வெளிப்படையாக பேசியதற்காகவும், தீபிகா படுகோன் அவரது ஆடைக்காகவும், அவர்களைப் போல பல பெண்கள் ட்ரோல் செய்யப்படுகின்றனர். தேர்வு சுதந்திரம் நமது அடிப்படை உரிமை. பெண்கள் துர்காவின் உருவகம். பெண் வெறுப்பு என்பது நாம் போராட வேண்டிய ஒரு தீமை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திவ்யா ஸ்பந்தனாவின் பதிலடி
திவ்யா ஸ்பந்தனா காட்டம்
சமந்தா- நாக சைதன்யா பிரிந்தபோது, சமந்தாவை நோக்கி ஏராளமான ட்ரோல்கள் வீசப்பட்டன. எனினும், அத்தனையும் தைரியமாக எதிர் கொண்டார் சமந்தா. அதேபோல், சாய் பல்லவியும், காஷ்மீர் பண்டிட்டுகள் மீதும், பசு பாதுகாப்பு குறித்தும் பேசிய விவகாரம் வைரலானது. இன்னொரு பக்கம், நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் காந்தாரா பட இயக்குனர் பற்றியும், அந்த படத்தை பற்றியும் பேசிய விதமும் சர்ச்சைகளை ஈர்த்தது. கன்னட திரைப்பட உலகிலிருந்து அவரை தடை செய்ய போவதாகும் செய்திகள் எழுந்தன. சென்ற வாரம் வெளியான, பதான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளில் தீபிகா படுகோன், காவி பிகினி அணிந்திருப்பதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது பல அரசியல் அமைப்புகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.