
உருவாகிறதா தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்? மனம் திறந்த இயக்குனர் பால்கி
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகர் என பலமுறை அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இளையராவின் கச்சேரியின் போது, தனது மகன்களுடன் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்து கேட்டார்.
அதன் ஒரு பாகமாக, இளையராஜாவின் கச்சேரியில் பாடவும் செய்தார்.
தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில், அவரது இசையிலேயே பாடும் வாய்ப்பையும் பெற்றார்.
ஒருமுறை ஒரு தனியார் ஊடகத்தின் பேட்டி ஒன்றில், பயோபிக் ஒன்றை எடுக்க விரும்பினால், யாருடைய வாழ்க்கையை படமாக்குவீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல், 'ரஜினி மற்றும் இளையராஜா' என கூறினார்.
card 2
மீண்டும் பால்கி இயக்கத்தில் தனுஷ்
பாலிவுட்டின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பால்கி.
ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலீஷ், அமிதாப் பச்சன் நடித்த பா, சீனி கம் போன்ற பல வெற்றி படங்களை தந்தவர் பால்கி.
தனுஷ், அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் ஷமிதாப் என்ற ஹிந்தி படமும் இயக்கியுள்ளார் பால்கி.
அவர் ஒரு பேட்டியில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை படமாக எடுக்க விருப்பப்படுவதாகவும், அதில் தனுஷை, இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இப்படம் எடுப்பதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
தற்சமயம், தனுஷ், கேப்டன் மில்லர் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். அதை அடுத்து D 50 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்கி நடிக்கிறார்.