'40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ்
கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த தக்ஷின் சிஐஐ உச்சிமாநாடில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாடினார்கள். அந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அதில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தலைமை தாங்கினார். அதோடு, திரையுலகம் சார்பாக நடிகர் தனுஷும் பங்குபெற்றார். அப்போது அவருக்கு, யூத் ஐகான் விருது தந்து கௌரவித்தார், மத்திய அமைச்சர். விருதை பெற்றுக்கொண்ட தனுஷ், "40 வயசுல யூத் ஐகான் விருது வாங்குவேன்னு சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் நிறைய சாதிக்க இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் நான் இதுபோன்ற கெட்டப்பில் வந்தபோது ஏற்க மறுத்தனர். ஆனால் தற்போது கொண்டாடுகிறார்கள். எனது பெற்றோருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்" என கூறினார்.