
தனுஷ் நடிக்கும் இட்லி கடை வெளியீட்டு தேதி இதுதான்; கசிந்த தகவல்
செய்தி முன்னோட்டம்
தனுஷ் இயக்கி, நடிக்கும் 52-வது படத்துக்கு 'இட்லி கடை' என தலைப்பிடப்பட்டுள்ளது.
'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ்.
அண்மையில் வெளியான அவரது 50-வது படமான 'ராயன்' படத்தையும் அவரே இயக்கினார்.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது 52-வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் தனுஷ்.
இணையத்தில் கசிந்த தகவலின் படி, இப்படம் ஏப்ரல் 2025 வெளியிடும் முனைப்பில் உள்ளதாம்.
படக்குழுவினர் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, நாளை காலை 11 மணியளவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Dhanush’s #IdlyKadai Release Date Announcement tomorrow!
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 7, 2024
Apr 10💥 pic.twitter.com/DAJ8SL3Djq
விவரங்கள்
படத்தை பற்றி மேலும் விவரங்கள்
இந்தப் படத்தை டான் பிசர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷின் வண்டர் பார் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கிறது.
'இட்லி கடை' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது.
படத்தில் தனுஷுடன் இணைந்து, சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இப்பட ஷூட்டிங் கலந்து கொள்வதை புகைப்படம் மூலமாக அறிவித்தார் நித்யா மேனன்.
இட்லி கடை படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் துவங்கிய நிலையில் தற்போது படத்தின் தேதியை அறிவிக்க தயாராகி விட்டனர் படக்குழுவினர்.