தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
தனுஷின் 3வது இயக்கமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' (NEEK) திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க இளம் நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தினை தனுஷின் ஒண்டெர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.
இவருடன் அனிக்கா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியார், தாமஸ் மேத்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ மற்றும் எடிட்டர் பிரசன்னா.
இப்படம் ஆரம்பத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனுஷை நாயகனாக வைத்து இயக்குவதை இருந்தது குறிப்பிடத்தக்கது.
அது நடைபெறாத காரணத்தால், அந்த கதையை தனுஷ் உரிமம் பெற்று இயக்கியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Neek on 21st FEB ❤️ pic.twitter.com/MSuBewyA4R
— Dhanush (@dhanushkraja) January 17, 2025