GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ்
செய்தி முன்னோட்டம்
G.V.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடியே'.
இந்த திரைப்படத்தில், கவுரி கிஷன், வெங்கட் பிரபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நடிகரும்-RJ-வுமான விக்னேஷ் கார்த்திக் தான், இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே 'இரண்டாம் திட்டம்' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது, ஜஸ்டின் பிரபாகரன்.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான A.L.விஜய், மிஸ்கின் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று மாலை, 'அடியே' படத்தின் ட்ரைலர்-ஐ வெளியிட்டார், தனுஷ்.
ட்ரைலர்-ஐ பார்க்கும் பொழுது, இது ஒரு டைம் ட்ராவல் சம்மந்தப்பட்ட படமாக தோன்றுகிறது.
இருப்பினும் ஸ்பூஃப் படங்களைப்போல, ஒரு சில சினிமா கதாபாத்திரங்களை கலாய்த்தும் எடுத்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
'அடியே' படத்தின் ட்ரைலர்
Best wishes team #Adiyae here is the trailer @gvprakash @vikikarthick88 @Maaliandmaanvi @Gourayy @vp_offl https://t.co/SAjwh7joAw
— Dhanush (@dhanushkraja) August 8, 2023