3 கோடி வியூஸ்களை கடந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர்
செய்தி முன்னோட்டம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு முன்னாள் நடைபெறுவது போன்ற கதைக்களம் கொண்டுள்ள இப்படத்தில், வித்தியாசமான கெட்அப்பில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதனிடையே கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளினை முன்னிட்டு இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் ரசிகர்களின் வரவேற்பினை பெற்று யூ-ட்யூபில் 3 கோடி வியூஸ்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
யூடியூபில் கலக்கும் 'கேப்டன் மில்லர்' டீசர்
#Clicks | நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' டீசர் யூடியூபில் 3 கோடி பார்வைகளை கடந்தது#SunNews | #CaptainMiller | @dhanushkraja pic.twitter.com/54Jkgj6IaI
— Sun News (@sunnewstamil) August 8, 2023