ஆதார் -பான் இணைப்பிற்கு இறுதி எச்சரிக்கை: டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள்!
செய்தி முன்னோட்டம்
மத்திய வருமான வரித்துறை பான் கார்டு (PAN Card) வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. வரும் 2025, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், 2026, ஜனவரி 1 முதல் உங்கள் பான் கார்டு செல்லாததாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளைவுகள்
செயலற்றதாக(Inoperative) மாறினால் ஏற்படும் விளைவுகள்
உங்கள் பான் கார்டு 'Inoperative' நிலைக்கு சென்றால் பின்வரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்: உங்களால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. அரசு உங்களுக்கு வழங்க வேண்டிய வரித் திரும்பப் பெறுதல்(Refund) தொகை நிறுத்தி வைக்கப்படும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் கணக்கிலிருந்து வழக்கத்தை விட அதிக அளவில் வரி (TDS/TCS) பிடிக்கும். புதிய வங்கி கணக்கு தொடங்குவது, 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வது மற்றும் கடன்களுக்கு விண்ணப்பிப்பது போன்ற சேவைகள் பாதிக்கப்படும். ஏற்கனவே பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ள ரூ. 1,000 அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இந்த கட்டணத்தை செலுத்திய பின்னரே வருமான வரி இணையதளத்தில் இணைக்க முடியும்.
செயல்முறை
பான்- ஆதார் இணைப்பது எப்படி?
1. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு- incometax.gov.in செல்லவும். 2. 'Quick Links' பிரிவில் உள்ள 'Link Aadhaar' என்பதை தேர்வு செய்யவும். 3. உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை பதிவிட்டு, அபராத கட்டணத்தை செலுத்தி இணைப்பை உறுதி செய்யவும். வரும் டிசம்பர் 31-க்குள் இந்த இணைப்பை முடிக்க தவறினால் பெரும் நிதிச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.