Page Loader
தனுஷ் பிறந்தநாளில் இட்லி கடையின் முதல் சிங்கிள் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவிப்பு
தனுஷ் பிறந்தநாளில் இட்லி கடையின் முதல் சிங்கிள் ரிலீஸ்

தனுஷ் பிறந்தநாளில் இட்லி கடையின் முதல் சிங்கிள் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 21, 2025
07:27 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷ் தனது வரவிருக்கும் திரைப்படமான இட்லி கடை மூலம் இயக்குநராக மீண்டும் வர உள்ளார். இந்தப் படத்தில் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல், முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். அவருடன் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பாகும். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், கடந்த காலங்களில் தனுஷ்-ஜிவி கூட்டணி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், இது ரசிர்கர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்

இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூலை 27 அன்று தனுஷின் பிறந்தநாளுக்கு சற்று முன்னதாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு குழு அறிவித்துள்ளது. சிறந்த நடிகர்கள், அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகர் தனுஷின் இயக்கத்தில் தயாராகியுள்ள, இட்லி கடை இரு சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post