Loading...
தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றது டிமான்டி காலனி 3: புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு
2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அருள்நிதியின் டிமான்டி காலனி 3 திரைப்படம் வெளியாகிறது.

தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றது டிமான்டி காலனி 3: புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

எழுதியவர் Vasuki
Nov 08, 2026
02:11 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்ட்டி காலனி 3 திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்ற சூழலில், தற்போது இதன் மூன்றாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற தடை

நீதிமன்றத் தடையை எதிர்கொண்ட 3-ஆம் பாகம்

முன்னதாக 'டிமான்ட்டி காலனி 3' திரைப்படம் கடந்த செப்டம்பர் 11 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இணை தயாரிப்பு நிறுவனமான வொயிட் நைட் என்டர்டெயின்மென்ட் தரப்பில், தங்களுக்குத் தெரியாமல் ஓடிடி உரிமம் மற்றும் திரையரங்கு வெளியீட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இடைக்காலத் தடையும் பெறப்பட்டது.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அப்படத்தின் மீதான இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது.

சட்டரீதியான சிக்கல்கள் அனைத்தும் சுமூகமாக முடிவுக்கு வந்ததை அடுத்து, தற்போது புதிய வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தணிக்கை சான்றிதழ்

பொங்கல் வெளியீட்டுத் திட்டம்

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்த முந்தைய பாகங்களைத் தொடர்ந்து, இந்த மூன்றாம் பாகமும் அமானுஷ்யக் கதைக்களத்தில் விறுவிறுப்பான திரில்லர் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தீவிரமான பயமுறுத்தும் காட்சிகளைக் கொண்டுள்ளதால் இப்படத்திற்குத் தணிக்கைக் குழு 'ஏ' (A) சான்றிதழ் வழங்கியுள்ளது.

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், பண்டிகைக் கால விடுமுறையைக் குறிவைத்து 2027 பொங்கல் தினத்தில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT