Page Loader
ஆராத்யா பச்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம்
ஐஸ்வர்யா ராய் உடன் சிறுமி ஆராத்யா பச்சன்

ஆராத்யா பச்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 20, 2023
02:29 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தியும், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகளுமான ஆராத்யா பச்சன், ஒரு தனியார் யூட்யூப் சேனல் மீது வழக்கு தொடுத்திருந்தார். மேலும் அந்த வழக்கில், தன்னுடைய உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருவதாகவும், அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை சற்று முன்னர் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது. அதன்படி, "ஒவ்வொரு குழந்தையும், மரியாதையுடனும் மதிப்புடனும் நடத்தப்படுவதற்கு உரிமையுண்டு. குழந்தை பற்றிய தவறான தகவல்கள், குறிப்பாக அவரது உடல்நிலை குறித்து, சட்டத்தில் முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாதவை" என்று நீதிமன்றம் கூறியது. தொடர்ந்து, இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களின் விவரங்களைப் பகிருமாறு, கூகிள்நிறுவனத்திடம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

card 2

வீடியோக்களை நீக்க கூகுளுக்கு பரிந்துரை செய்த நீதிமன்றம்

"சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தும் தகவல்கள் பரப்பப்படுவது இது முதல் முறை அல்ல என்றாலும், ஒரு குழந்தையை குறிவைத்து, அது போன்ற தகவல்களை பரப்பும் நபரின், "மோசமான வக்கிர புத்தியை " பிரதிபலிப்பதாக நீதிமன்றம் கூறியது. அதோடு,ஆராத்யாவின் உடல்நிலை குறித்த தவறான தகவல்களை கொண்ட வீடியோக்களை நீக்குமாறும், அவை மேற்கொண்டு பகிரப்படாததற்கு ஆவண செய்யுமாறும் கூகிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். சில நாட்களுக்கு முன்னர். ஆராத்யாவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் விரைவில் இறந்துவிடுவார் என்றும், சில யூட்யூப் வீடியோக்களில், அவர் இறந்து விட்டார் என்றும் கூறப்பட்டது. இதுதான், ஆராத்யா தரப்பில் நீதிமன்ற தீர்வை அணுக காரணமாக இருந்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.