முதல் முறையாக தீபிகா, ரன்வீர் தங்கள் குழந்தை 'துவா'வின் போட்டோவை பகிர்ந்தனர்
செய்தி முன்னோட்டம்
பிரபல பாலிவுட் ஜோடி தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், தங்களது மகள் 'துவா படுகோன் சிங்' உடன் தீபாவளியை கொண்டாடும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். இந்த நட்சத்திர குடும்பம் பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடியதை இந்த புகைப்படங்கள் வெளிக்காட்டின. "தீபாவளிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்..." என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த புகைப்படங்களில், துவா சிவப்பு நிற ஆடையில் பிரகாசமாக இருந்தார். தீபிகா, தங்க நகைகளுடன் கூடிய அடர் சிவப்பு சேலையிலும், ரன்வீர் எம்பிராய்டரி செய்யப்பட்ட கிரீம் நிற குர்தாவிலும், ஊர் கண்ணே பட்டுவிடும் அளவிற்கு தோன்றினர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Pure family goals ❤️#RanveerSingh, #DeepikaPadukone and #DuaPadukoneSingh look like a dream in this family moment.😍#Celebs pic.twitter.com/6EaaMbolOX
— Filmfare (@filmfare) October 21, 2025
விவரங்கள்
மகளுடன் நேரம் செலவிட, ஷூட்டிங் நேரத்தை மாற்றும் தீபிகா
இந்த இனிமையான பதிவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்கள் அன்பும் வாழ்த்தும் தெரிவித்தனர். தங்கள் மகள் பிறந்ததை இந்த ஜோடி கடந்த செப்டம்பர் 8, 2024 அன்று அறிவித்தனர். அப்போதிருந்து தீபிகா தன்னுடைய திரைப்பட ஷூட்டிங் நேரத்தை மகளுடன் நேரம் செலவிடுவதற்கு தகுந்த மாதிரி மாற்றியமைத்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக 'கல்கி 2898 கி.பி' மற்றும் 'ஸ்பிரிட்' படத்தின் ஷூட்டிங் நேரம் மாற்றியமைக்க முடியாததால், படத்திலிருந்தே விலகியதாக செய்திகள் வெளியாகின. தற்போது அவர் ஷாருக்கானுடன் 'கிங்' படத்தில் நடித்து வருகிறார். அதோடு, அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.