
மஞ்சுமேல் பாய்ஸ் நடிகருடன் எளிமையாக திருமணத்தை முடித்த நடிகை அபர்ணா தாஸ்
செய்தி முன்னோட்டம்
ஏற்கனவே நாம் தெரிவித்தது போல, டாடா பட நாயகி அபர்ணா தாஸ், தன்னுடைய காதலரும், மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் நடிகர் தீபக் பரம்போல்-உம் இன்று திருமணம் செய்துகொண்டார்.
'பீஸ்ட்' படத்தில் இரண்டாம் நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ்.
அவரும், 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்கிற மலையாள படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடேயே அறிமுகமான நடிகர் தீபக் பரம்போல்-ம் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் 'மனோகரம்' என்கிற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அப்போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கேரளாவின் வடக்கஞ்சேரியில் மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்தேறியது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை அபர்ணா தாஸ் திருமணம்
#AparnaDas got married to actor #DeepakParambol of #ManjummelBoys fame 🥳pic.twitter.com/nmSBNYlsms
— Movie Tamil (@MovieTamil4) April 24, 2024