LOADING...
தமிழில் ரீமேக் ஆகிறதா 'கோர்ட்' திரைப்படம்? தேவயானி மகள் இனியா நடிக்கிறாரா?
தமிழில் ரீமேக் ஆகிறதா 'கோர்ட்' திரைப்படம்?

தமிழில் ரீமேக் ஆகிறதா 'கோர்ட்' திரைப்படம்? தேவயானி மகள் இனியா நடிக்கிறாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 28, 2025
01:12 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக பெரிதும் வரவேற்பைப் பெற்ற 'கோர்ட் - ஸ்டேட் Vs எ நோபடி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 14ம் தேதி நானியின் தயாரிப்பில் வெளியான இப்படம், நீதித்துறையின் பின்னணியில் ஓர் உணர்வுப்பூர்வமான நாடகமாக அமைந்தது. அதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர், இயக்குநர் தியாகராஜன் பெற்றதிலிருந்து, ரீமேக் தயாரிப்புப் பணிகள் பல மாதங்களாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்படம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு OTTயில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அசல் திரைப்படமான *'கோர்ட் - எ ஸ்டேட் Vs எ நோபடி'* படத்தை ராம் ஜெகதீஷ் இயக்க, பிரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விவரங்கள்

நடிகர்கள் மற்றும் தயாரிப்பு விவரங்கள்

தமிழ் ரீமேக்கில், படத்தின் மைய காதல் ஜோடி கதாபாத்திரங்களில் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக் மற்றும் நடிகை தேவயானியின் மகள் இனியா நடிக்கவுள்ளனர். பிரியதர்ஷி நடித்த முக்கியமான வழக்குரைஞர் வேடத்தில் பிரசாந்த் தேர்வாகியுள்ளாராம். சாய்குமார் நடித்த நீதிபதி வேடத்தில், தியாகராஜனே தனக்கேற்ற கதாபாத்திரத்தை ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தினை தியாகராஜனும், ஃபைவ் ஸ்டார் கதிரேசனும் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளனர். தமிழில் இப்படம் எப்போது உருவாகத் தொடங்கும், வெளியீட்டு தேதி எப்போது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.