Page Loader
சிட்டாடல் படவிழாவிற்கு சமந்தா அணிந்திருந்த ட்ரெஸின் விலை இவ்வளவா?
சிட்டாடெல் படவிழாவில் கலந்துகொண்ட சமந்தா

சிட்டாடல் படவிழாவிற்கு சமந்தா அணிந்திருந்த ட்ரெஸின் விலை இவ்வளவா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 21, 2023
06:01 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகப்போகும் வெப் தொடரான 'சிட்டாடெல்' தொடக்க விழா, லண்டனில் நடைபெற்றது. அந்த தொடரின் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்கிறார். 'சிட்டாடெல்'காக, தன்னுடைய உடலை மெருகேற்றி உள்ளார் சமந்தா எனலாம். சிக்ஸ்பேக் சகிதமாக, கருப்புநிற உடையில் வந்திருந்த சமந்தா, அதனுடன் அழகான நெக்லெஸ் அணிந்திருந்தார். காண்போர் கண்களை கவரும் வகையில், கொள்ளை அழகில் இருந்த சமந்தாவின், உடையும், நகையும் தற்போதைய வைரல் செய்திகளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் அதன் விலை தான். ஆம், சமந்தா அணிதிருந்த கருப்பு நிற கிராப் டாப் மற்றும் லேஸ் ஸ்கிர்ட்டின் மதிப்பு ரூ. 64,500. எனவும், அவர் அணிந்திருந்த வைர நகைகளின் மதிப்பு 5 கோடிக்கும் மேல் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

கருப்பு உடையில் கலக்கிய சமந்தா