Page Loader
சித்தார்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது சித்தா திரைப்பட போஸ்டர்
சித்தார்த் நடிப்பில் உருவாகும் சித்தா திரைப்பட போஸ்டர் வெளியானது

சித்தார்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது சித்தா திரைப்பட போஸ்டர்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 17, 2023
06:21 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளான இன்று, அவரின் நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர். 'சித்தா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், தமிழ் சினிமாவில் இது வரை பெரிதாக பேசப்படாத ஒரு அழகிய உறவான சித்தப்பா உறவை பற்றி பேசும் உணர்வுப்பூர்வமான கதை என, இந்த தலைப்பை வெளியிட்ட உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்தார். எட்டாக்கி என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தை இயக்கி இருப்பது, 'பண்ணையாரும் பத்மினியும்' புகழ், S .U .அருண்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர், 'கனா' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த திபுநினன் தாமஸ். படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

கமல்ஹாசன் வெளியிட்ட படத்தின் போஸ்டர்