Page Loader
நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை 
நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை

நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை 

எழுதியவர் Nivetha P
Sep 14, 2023
06:14 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து விஜயலட்சுமி அளித்துள்ள பேட்டியில், 7 முறை கருக்கலைப்பு செய்ததாக கூறியிருந்தார். திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் மற்றும் போலீஸ் விசாரணையிலும் இவர் சீமானுக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலங்களை அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் கடந்த செப்.,7ம் தேதி விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதனிடையே கடந்த 9ம் தேதி சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை வளசரவாக்க காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அன்று ஆஜராகவில்லை.

சம்மன் 

வரும் 18ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் 

இதனைத்தொடர்ந்து கடந்த 12ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் அவர் தனக்கு கட்சி பணிகளும், மற்ற வழக்குகள் தொடர்பாக பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்று ஆஜராக வேண்டிய நிலை உள்ளதால் இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக முடியவில்லை என்று கூறி 2 விளக்க கடிதங்களை வழக்கறிஞர்கள் கொண்டு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இன்று(செப்.,14) சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு சென்ற வளசரவாக்க காவல்துறை வரும் 18ம் தேதி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி சம்மன் வழங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.