Page Loader
கடன் தொகையை வசூலிக்க சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கடன் தொகையை வசூலிக்க சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 03, 2025
01:18 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் தொடர்பான கடன் பிரச்சினைக்காக சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துஷ்யந்தின் தயாரிப்பு நிறுவனமான ஈசன் புரொடக்ஷன்ஸ், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து ₹3.74 கோடி கடனை ஜகஜால கில்லாடி திரைப்படத்தின் தயாரிப்புக்காக வாங்கியிருந்தது. இந்த கடன் உரிய காலத்தில் திரும்பிச் செலுத்தப்படாததால், பிரச்சினையைத் தீர்க்க உயர் நீதிமன்றம் நீதிபதி டி.ரவீந்திரனை நடுவராக நியமித்தது. ஜகஜால கில்லாடியின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸுக்கு மாற்றுமாறு ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு நடுவர் உத்தரவிட்டார். மேலும், வட்டி உட்பட ₹9.39 கோடி மீட்கப்படுவதை உறுதி செய்தார்.

மேல்முறையீடு

துஷ்யந்த் தரப்பு எதிர்ப்பால் மேல்முறையீடு

இருப்பினும், துஷ்யந்தின் தயாரிப்பு நிறுவனம் உரிமைகள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் தனபாகியம் எண்டர்பிரைசஸ் நடுவரின் முடிவை அமல்படுத்தக் கோரி வழக்குத் தாக்கல் செய்தது. சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்து ஏலம் விட்டு நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு தனபாகியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், ஈசன் புரொடக்ஷன்ஸ் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கத் தவறியதால், சொத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.