மறைந்த இயக்குனர் பாலச்சந்தருக்கு, சென்னையில் நினைவு சதுக்கம்
கோலிவுட்டில் பெரிய இயக்குனராக சாதிக்கதுடிக்கும் பலருக்கும் ரோல் மாடலாக இருந்தவர், இருப்பவர், மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர். தற்போது திரையுலகில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இருபெரும் சக்திகளை, அறிமுகப்படுத்தி, தட்டிக்கொடுத்து, தூக்கிவிட்டவர் இயக்குனர் பாலசந்தர். வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்கும் இருந்த எல்லைகளை தகர்த்தெறிந்தவர். 'கவிதாலயா' ப்ரோடுக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவி, திரைப்படங்கள், சின்னத்திரை சீரியல்கள் என தயாரித்து, இயக்கினார். அவர், கடந்த 2014 -ஆம் ஆண்டு, வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரை கௌரவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன், அவரின் உருவச்சிலையை திறந்திருந்தார். தற்போது, சென்னை கார்பரேஷன் சார்பாக, கே.பாலசந்தர் நினைவாக சென்னையில் கே.பாலசந்தர் சதுக்கம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.