விஜய் வீட்டிற்கு அருகிலேயே வீடு வாங்கிய கோலிவுட் நட்சத்திரங்கள் யார் தெரியுமா?
நடிகர் விஜய், நீலாங்கரை, பனையூர் பக்கமாகத்தான் வசிக்கிறார் என்பது தெரியும். ஆனால், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக சென்னை R.A.புரம் பகுதியில் ஒரு அலுவலகத்தை சமீபத்தில் திறந்துள்ளார். சென்னையின் காஸ்டலி ஏரியாவாக அறியப்படும் R.A.புரத்தில், புதிதாக கட்டப்பட்ட ஒரு பெரிய அபார்ட்மெண்டில், வீடு வங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நடிகர் விஜய் புதிய வீடு வாங்கியதை அடுத்து, அதே ஏரியாவில் மேலும் இரு கோலிவுட் பிரபலங்கள் வீடு வாங்கியுள்ளனராம். அவர்களில், ஒருவர் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான். நடிகர் துல்கர், மலையாளத்தில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
விஜய் வீடு அருகே பிளாட் வாங்கிய தயாரிப்பாளர்
துல்கர் சல்மான், தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னையில் வீடு வாங்கியுள்ளார் என சொல்லப்பட்டாலும், அவரின் மனைவி, அமல் சூஃபியா, சென்னை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், துல்கர் அடிக்கடி சென்னை வருவதுண்டு என பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இந்த காரணங்களுக்காகவும் துல்கர் சென்னையில் வீடு வாங்கி இருக்கலாம். மறுபுறம், விஜய்யின் நெருங்கிய உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவும், அதே அபார்ட்மெண்டில் ஒரு வீடு வங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை தயாரித்தவர். இவரின் மகளை, மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ்ற்கு மணமுடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.