LOADING...
தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது வழக்கு
நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்கு

தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது வழக்கு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2025
11:24 am

செய்தி முன்னோட்டம்

மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.60 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் மற்றொரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி, தற்போது செயல்படாத தம்பதியினரின் நிறுவனமான பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடையது. 2015 முதல் 2023 வரை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் ரூ.60 கோடி மோசடி செய்ய சதி செய்ததாக தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

மோசடி

தம்பதியினரின் பெஸ்ட் டீல் டிவியுடன் தொடர்புடைய மோசடி

லோட்டஸ் கேபிடல் ஃபைனான்சியல் சர்வீசஸின் இயக்குனர் கோத்தாரி தனது புகாரில், ராஜேஷ் ஆர்யா என்பவர் தனக்கு பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் என்ற வீட்டு ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் சில்லறை விற்பனை தளத்தின் இயக்குநர்களாக இருந்த தம்பதியினரை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். அந்த நேரத்தில், இந்த ஜோடி நிறுவனத்தின் 87.6% பங்குகளை வைத்திருந்தது. பாலிவுட் தம்பதியினர் ஆரம்பத்தில் 12% வட்டியில் ரூ.75 கோடி கடனைக் கேட்டதாக கோத்தாரி கூறினார். பின்னர் அதிக வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்காக நிதியை "முதலீடாக" மாற்றும்படி அவர் வற்புறுத்தப்பட்டார், அதே நேரத்தில் மாதாந்திர வருமானம் மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்துவது உறுதி செய்யப்பட்டது.

முதலீடு

உறுதிமொழிகளின் படி, நிறுவனத்தில் முதலீடு செய்த கோத்தாரி 

உறுதிமொழிகளைத் தொடர்ந்து, கோத்தாரி ஏப்ரல் 2015இல் பங்கு சந்தா ஒப்பந்தத்தின் கீழ் ரூ.31.95 கோடியை மாற்றியதாகக் கூறினார், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 2015இல் துணை ஒப்பந்தத்தின் கீழ் மேலும் ரூ.28.53 கோடியை மாற்றினார். மொத்தத் தொகையும் பெஸ்ட் டீல் டிவியின் HDFC வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஷில்பா ஷெட்டி செப்டம்பர் 2016இல் பெஸ்ட் டீல் டிவியின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு, மற்றொரு ஒப்பந்தத்தில் தவறியதற்காக அந்த நிறுவனம் மீது திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ராஜேஷ் ஆர்யா என்ற இடைத்தரகர் மூலம் தனது பணத்தை மீட்க பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவை தோல்வியடைந்ததாக கோத்தாரி குற்றம் சாட்டினார். இறுதியில் அவர் ஒரு புகாரைப் பதிவு செய்தார்