NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை 
    சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை 
    பொழுதுபோக்கு

    சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை 

    எழுதியவர் Venkatalakshmi V
    April 20, 2023 | 01:06 pm 1 நிமிட வாசிப்பு
    சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை 
    'ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023' பல மறுதலைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கான முன்வடிவத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் சினிமாத்துறையினரிடம் இருந்து வெளிப்படுகிறது. அதற்கு முன்னர், இந்த ஒளிப்பதிவு திருத்த மசோதாவை பற்றி தெரிந்துகொள்வது அவசியம். பல ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட தணிக்கை சட்டத்தை திருத்தி, புதிதாக விதிமுறைகளை மாற்றி அமைக்கப்பட்ட 'ஒளிப்பதிவு திருத்த மசோதா', 2021 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடம் கருத்துகேட்கப்பட்டது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசு அதை முன்னெடுத்து செல்லாமல் நிறுத்தி வைத்தது. தற்போது அந்த திட்டத்திற்கான முன்வடிவத்திற்கு தான், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி, வீடியோ பைரஸியில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.

    தணிக்கை சான்றிதழ் விதிகளை மாற்றும் புதிய சட்ட மசோதா 

    இந்த புதிய சட்ட மசோதாவில், தற்போது தரப்படும் U/A சான்றிதழில், மேலும் பல உட்பிரிவுகள் அறிமுகப்படுத்தவுள்ளன. குழந்தைகளின் வயதிற்கு ஏற்றவாறு, அவை பிரிக்கப்பட்டு, UA 7+, UA 13+, மற்றும் UA 16+ என தணிக்கை செய்யப்படும். தணிக்கை சான்றிதழலின், வேலிடிட்டி காலம் 10 ஆண்டுகள் என இருந்ததை நீக்குகிறது புதிய சட்டம். முக்கியமாக, OTT மற்றும் தொலைக்காட்சிகளில் திரைப்படம் வெளியாகும் முன்னர், மற்றொரு சான்றிதழ் பெறவேண்டும். ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு சென்சார் இல்லை என்ற குறை இதன் மூலம் நீங்கும். தணிக்கை சான்றிதழ் பெற்றபின்னும், படத்தின் காட்சிகள் சர்ச்சையை தூண்டும் வகையில் இருந்தால், மத்திய அரசு தலையிட்டு, சான்றிதழில் மாற்றம் செய்யலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஓடிடி
    மத்திய அரசு
    திரைப்பட அறிவிப்பு

    ஓடிடி

    கட்டண சேவையாகும் Jio Cinema: இனி இலவசம் இல்லை ஜியோ
    நடிகை ரேவதியின் புதிய பரிமானத்தில் வெளியாகும் 'டூத் பரி: வென் லவ் பைட்ஸ்' கோலிவுட்
    ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' படத்துக்கு தடை விதிக்கப்படுமா? திரையரங்குகள்
    இந்த வாரம், வெள்ளித்திரையிலும், OTT தளத்திலும் வெளியாக போகும் படங்கள் என்னென்ன? திரைப்பட வெளியீடு

    மத்திய அரசு

    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  இந்தியா
    கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம்  மு.க ஸ்டாலின்
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு!  இந்தியா

    திரைப்பட அறிவிப்பு

    மெகா கூட்டணியில் இணைந்த நடிகை அதிதி ஷங்கர்!  கோலிவுட்
    'விமானம்' திரைப்படத்தில் உடல் ஊனமுற்றவராக நடிக்கும் சமுத்திரக்கனி கோலிவுட்
    4 ஆண்டுக்கு பின் வெளிவரும் நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம்! டீசர் வெளியீடு கோலிவுட்
    மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை!  கோலிவுட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023