விஷால் - சுந்தர் சியின் புருஷன் பட ஷூட்டிங் BTS வீடியோ வெளியானது: காண்க
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹிட் ஜோடியான நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் மீண்டும் கைகோர்த்துள்ள 'புருஷன்' படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்தப் படத்தின் அதிரடியான 'டைட்டில் டீசர்' ஏற்கனவே வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவ்னி சினிமாக்ஸ் தன்னுடைய X பக்கத்தில் படத்தின் BTS விடியோவை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே 'ஆம்பள' மற்றும் 'மத கஜ ராஜா' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய விஷால்-சுந்தர்.சி ஜோடி, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தை, அவ்னி சினிமாக்ஸ் தயாரிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Peak #SundarC Entertainment loading 🎆
— Avni Cinemax (@AvniCinemax_) March 6, 2026
An exclusive behind-the-scenes peek from the sets of #Purushan.
Stay tuned for more ❤️🔥@benzzmedia @AcsArunkumar @VishalKOfficial @tamannaahspeaks @hiphoptamizha @iYogiBabu @khushsundar #AnanditaSundar @vichuviswanath @Venkatt_Ragavan… pic.twitter.com/OCwufdENB9
விவரங்கள்
படத்தை பற்றி இதுவரை நாம் அறிந்தவை
இந்தப் படத்திற்கு மற்றொரு பலமாக, பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். சுந்தர் சி - விஷால் - ஹிப்ஹாப் தமிழா ஆகிய மூவரும் ஏற்கனவே 'ஆம்பள' படத்தில் இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் எனர்ஜி இந்தப் படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர் ஏற்கனவே சுந்தர்.சி உடன் அரண்மனை படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். சுந்தர் சி-யின் பாணியிலான நகைச்சுவை மற்றும் விஷாலின் அதிரடி சண்டை காட்சிகளுக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பது உறுதி.