Loading...
'பிரேக்கிங் பேட்' நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம் 
ரேக்கிங் பேட்' நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்

'பிரேக்கிங் பேட்' நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம் 

எழுதியவர் Vasuki
Oct 13, 2026
03:26 pm

செய்தி முன்னோட்டம்

உலக அளவில் புகழ்பெற்ற 'பிரேக்கிங் பேட்' (Breaking Bad) தொலைக்காட்சித் தொடரில் வால்டர் ஒயிட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்.ஜே. மிட்டே, தனது 34-வது வயதில் காலமானார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பிரவுன்ஸ்வில்லே பகுதியில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அன்பான நடிகர், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைக் குரல் கொடுத்த சமூகப் போராளியை இழந்துவிட்டோம் என அவரது செய்தித் தொடர்பாளர்கள் கண்ணீருடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தடையை வென்ற திறமை

மூளை முடக்குவாதத்தைச் சவாலாக ஏற்று சாதித்த நாயகன்

ஆர்.ஜே. மிட்டே தனது மூன்று வயதில் இருந்தே பெருமூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தனது குறைபாட்டை ஒரு தடையாகக் கருதாமல், 'பிரேக்கிங் பேட்' தொடரின் ஐந்து சீசன்களிலும் தனது யதார்த்தமான நடிப்பால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தார்.

நடிப்பைத் தாண்டி மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகத் தீவிரமாகப் போராடி வந்த அவர், 'மிட்டே அறக்கட்டளை' மற்றும் சமூக அமைப்புகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

கடந்த ஆண்டு கென்னடி சுரேஸ் என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில், அவரது இந்த திடீர் மறைவு அனைவரையும் உலுக்கியுள்ளது.

ரசிகர்கள் அஞ்சலி

ஒரு நல்ல ஆன்மாவை உலகம் இழந்துவிட்டது

இளம் வயதிலேயே ஆர்.ஜே. மிட்டே மறைந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள பிரேக்கிங் பேட் ரசிகர்கள் மற்றும் சக திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

"குறைபாடுகள் ஒரு மனிதனின் அடையாளமாகி விடாது என்பதை உலகுக்கு நிரூபித்தவர் மிட்டே. அவர் எப்போதும் பிரேக்கிங் பேட் குடும்பத்தின் நெஞ்சில் வாழ்வார்" என ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

பிரையன் கிரான்ஸ்டன் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து அமைதியான அதே சமயம் அழுத்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திய ஒரு தலைசிறந்த திறமையாளனை சினிமா உலகம் மிக விரைவாக இழந்துவிட்டதாகக் கூறி பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT