
விபத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம்; அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சில மாதங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்திருந்தார்.
அதோடு, அந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா திருமண விழாவிலும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதற்கிடையே, ஷாருக்கான், ஒரு பெயரிடப்படாத புது படத்தின் ஷூட்டிங்கிற்காக USA-வில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து நேர்ந்ததாகவும், அதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மூக்கில் ஏற்பட்ட காயத்திற்காக, அறுவை சிகிச்சை செய்யவேண்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், சிகிச்சை முடிந்து, ஷாருக்கான், தற்போது மும்பை திரும்பிவிட்டதாக தெரிகிறது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் ஷாருக்கானுக்கு காயம்
Jawan star SRK met with an accident in the US and had to be rushed to the hospital where he underwent surgery.https://t.co/1UM8BF5y11#ShahRukhKhan𓀠 pic.twitter.com/CQv2rVhtiM
— DNA (@dna) July 4, 2023