சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்து பாபி தியோல் வழங்கிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அது குறித்த தகவல்களை பாலிவுட் நடிகர் பாபி தியோல் வழங்கியுள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள அனிமல் திரைப்படம், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிய வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த நேர்காணலில் இந்தியா டுடேவிடம் பேசிய பாபி தியோல், அவர் நடிக்கும் கங்குவா திரைப்படம் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
சூர்யா திறமையான நடிகர்- பாபி தியோல்
கங்குவா பட குழுவினர் பிரமாதமான படக்குழுவினர் என கூறிய பாபி தியோல், சூர்யா ஒரு அற்புதமான நடிகர் மற்றும் மிகவும் அர்ப்பணிப்புள்ளவர் என பேசினார். மேலும் இந்த படத்திற்காக தன்னுடைய இயல்பான பாணியில் இருந்து வெளியில் வந்துள்ளதாகவும், தமிழ் பேசத் தெரியாதது அதற்கு ஒரு காரணம் எனவும் பாபி தியோல் நேர்காணலில் தெரிவித்தார். அடுத்த வருடம் கோடை காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கங்குவா திரைப்படம், பீரியாடிக் படமாக உருவாகி வருகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், உலக அளவில் 36 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சூர்யா குறித்து இந்தியா டுடேவிடம் பாபி தியோல்
Latest - @TheDeol About @Suriya_Offl Anna & @KanguvaTheMovie.#Kanguva pic.twitter.com/WPIP9Pbwmg— Aadhy 🌩️ (@Aadhy_offl) December 8, 2023