Page Loader
கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கைது செய்யப்பட்டதாக பதிவு

கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள்

எழுதியவர் Nivetha P
May 20, 2023
01:47 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகர்களுள் மிகப்பிரபலமான அமிதாப் பச்சன் சமூகவலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர். அண்மையில் அறிமுகமில்லா நபரோடு பைக்கில் பின்னே அமர்ந்துச்செல்லும் வகையிலான அமிதாப்பச்சன் புகைப்படத்தினை பதிவுச்செய்திருந்தார். அதில் அவர் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொள்கிறார் என்னும் சர்ச்சையானது. இந்நிலையில் அமிதாப்பச்சன் மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில், மும்பை போலீஸ் வேன்முன் நிற்கும் புகைப்படத்தினை பதிவுச்செய்துள்ளார். அதில் அவர் சோகமான முகத்தோடு காணப்படுகிறார். மேலும்,'கைதுச்செய்யப்பட்டேன்' என்னும் தலைப்பினையும் கொடுத்துள்ளார். அவருடைய இந்த பதிவிற்கு சிலர், "கடைசியாக மும்பை போலீஸ், டானை பிடித்துவிட்டது" என்று வேடிக்கையாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து ஹெல்மெட் சர்ச்சைக்கு அவர், அது படப்பிடிப்பிற்காக போலீஸ் அனுமதியுடன் எடுக்கப்பட்ட வீடியோ. நான் பைக்கின் பின்புறம் அமர்ந்து செல்வதுப்போல் நடித்தேன், சவாரி செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

Instagram அஞ்சல்

Instagram Post