ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்: தலைவர் வில்லனாக பட்டையைக் கிளப்பிய டாப் 5 படங்கள்
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறுவதற்கு முன்பு, அவர் நிறைய எதிர்மறையான கேரக்டர்களை நடித்து, அவை இன்றளவும் பேசுபொருளாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 12 அன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், தலைவரின் ஐந்து வில்லன் பாத்திரங்களைப் பற்றி இதில் பார்க்கலாம். 16 வயதினிலே (1977): இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், கிராமத்து ரவுடியான பரட்டை வேடத்தில் நடித்த ரஜினிகாந்த், தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஒவ்வொரு முறையும் பரட்டை ஒரு அப்பாவியான சப்பானியை (கமல்ஹாசன்) எதிர்கொள்ளும் காட்சி, தவிர்க்க முடியாமல் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்தின் "இது எப்படி இருக்கு" டயலாக் மிகவும் பிரபலமா ஒன்றாக மாறியது.
மூன்று முடிச்சு (1976)
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில், ரஜினிகாந்த், பிரசாத் என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு சந்தர்ப்பவாதியாக நடித்து ரசிகர்களின் இதயங்களை வென்றார். வசந்த கால பாடலுடன் கூடிய புகழ்பெற்ற படகு காட்சி, அதில் பிரசாத் தனது நண்பன் பாலாஜியைக் (கமல்ஹாசன்) கொன்று, தன் காதலியை (ஸ்ரீதேவி) கட்டுப்படுத்த முயலும் நடிப்பு இன்றும் பாராட்டைப் பெறும் ஒன்றாக உள்ளது.
அவர்கள் (1977)
முந்தைய ரஜினி-கமல் கூட்டணியைப் போலல்லாமல், இந்த படம் ரஜினிகாந்தை (ராமநாதன்) மையமாகக் கொண்டது. அவர் தனது மனைவி அனுவை (சுஜாதா) சித்திரவதை செய்வதன் மூலம் மகிழ்ச்சியைப் பெறுகிறார். ஒரு முக்கோணக் காதலில் சிக்கி, தனி ஒரு தாயான அனுவின் வாழ்க்கை, அனுவுக்காகப் போட்டியிடும் மூன்று ஆண்கள்- அவளது கணவன் (ராமநாதன்), அவளது முன்னாள் காதலன் பரணி (ரவி குமார்) மற்றும் சமீபத்திய அபிமானியான ஜானி (கமல்ஹாசன்), ஆகியோரைச் சுற்றி சுழல்கிறது. இதில் கமல்ஹாசனின் அடக்கமான நடிப்பை விமர்சகர்கள் பாராட்டினாலும், அதற்கு நேரெதிரான கொடூர கணவன் வேடத்தில் சிறப்பாக நடித்த ரஜினிகாந்தும் பாராட்டை பெற்றார்.
நெற்றி கண் (1981)
இந்த திரைப்படம் ஒரு பெண்ணியலாளரும் நடுத்தர வயது தொழிலதிபருமான சக்ரவர்த்தியின் (ரஜினிகாந்த்) வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. அவர் இளம் பெண்ணான ராதாவை (சரிகா) கற்பழிக்கிறார். இருப்பினும், சக்ரவர்த்தியை பழிவாங்க அவரது மகன் சந்தோஷும் ராதாவும் கைகோர்க்கும்போது விஷயங்கள் மோசமாகின்றன. இதில் மகன் சந்தோஷ் வேடத்தில் ரஜினிகாந்தே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்த படத்தில் வரும் ராமனின் மோகனம் பாடல் வெளியான உடனேயே ஹிட் ஆனது.
எந்திரன் (2010)
முள்ளும் மலரும், மூன்று முகம், படிக்காதவன், பாஷா, அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிகாந்த் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவரது வில்லன் கதாபாத்திரங்களுக்காக ஏங்கிய ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்டது போல் இந்த படம் இருந்தது. இதில் விஞ்ஞானி வசீகரன் மற்றும் சிட்டி ரோபோ என இரண்டு வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். சிட்டி என்பது வில்லன் கதாப்பாத்திரமாக இதில் வடிவமைக்கப்பட்டிருந்தது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், ரஜினிகாந்தை ஒரு வில்லனாகக் காட்டிய எந்திரன், அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.