Page Loader
"எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்! 
பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்

"எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்! 

எழுதியவர் Arul Jothe
Jun 06, 2023
02:26 pm

செய்தி முன்னோட்டம்

மெல்லிசைகளாக இருந்தாலும் சரி, பாப் இசையாக இருந்தாலும் சரி, ஆலப் ராஜுவின் குரலைக் கேட்டு மெய்சிலிர்க்காதவர்களே இருக்க முடியாது. இன்று அவரின் பிறந்தநாள். இந்த நாளில் அவர் பாடி பிரபலமான சில பாடல்களை பார்ப்போம் பாடகர் ஆலப் ராஜு தற்போது தென்னிந்தியத் திரைப்படத் துறையில் பணிபுரியும் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் பிரபல மலையாள பின்னணி பாடகர்களான ஜே.எம்.ராஜு மற்றும் லதா ராஜு ஆகியோரின் மகனாவார். ஜல் ஜல் ஜல் ஓச: சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளியான 'மனம் கொத்தி பறவை' என்ற படத்தில் இடம் பெற்றிருக்கும் "ஜல் ஜல் ஜல் ஓச" பாடலை ஆலப் ராஜு தான் பாடியிருந்தார். இந்த பாடல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Aalap Raju Birthday 

பாடகர் ஆலப் ராஜு பாடிய பாடல்கள்

தீ இல்லை: நடிகர் ஜெயம் ரவி நடித்து வெளியான 'எங்கேயும் காதல்' திரைப்படத்தில் வரும் "தீ இல்லை" என்ற பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். பாடலாசியர் வாலியின் கைகளால் எழுதப்பட்ட இந்த பாடலை ஆலப் ராஜு மற்றும் ராணினா ரெட்டி ஆகியோர் பாடியிருந்தனர். இதுவும் பலரது மனம் கவர்ந்த ஒரு பாடலாகும். வாயைமூடி சும்மா இரு டா: மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்திருந்த 'முகமூடி' திரைப்படத்தில் வரும் "வாயைமூடி சும்மா இரு டா" என்ற பாடலையும் ஆலப் ராஜு தான் பாடியிருந்தார். 'முகமூடி' திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும், இந்த பாடலுக்கு தனி மவுசு இருந்தது.