Page Loader
'லியோ' படத்தின் சிறப்பு திரையிடல் - பில்ரோத் மருத்துவமனைக்கு நன்றிகளை தெரிவித்த இயக்குனர்
'லியோ' படத்தின் சிறப்பு திரையிடல் - பில்ரோத் மருத்துவமனைக்கு நன்றிகளை தெரிவித்த இயக்குனர்

'லியோ' படத்தின் சிறப்பு திரையிடல் - பில்ரோத் மருத்துவமனைக்கு நன்றிகளை தெரிவித்த இயக்குனர்

எழுதியவர் Nivetha P
Oct 25, 2023
07:35 pm

செய்தி முன்னோட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த 19ம்.,தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸானது. இப்படம் வெளியாகி 5 நாட்களில் சுமார் 419 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர் விடுமுறை காலத்தில் வெளியிடப்பட்டதால், அனைத்து திரையரங்குகளிலும் இப்படம் ஹவுஸ் புல்'லாக ஓடி கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில், பில்ரோத் மருத்துவமனை டீன் டாக்டர், ராஜேஷ்.ஜே, இப்படத்தின் சிறப்பு திரையிடலை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் புற்றுநோய் பாதிப்புடையோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என அனைவருக்காகவும் ஏற்பாடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு தற்போது இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

இயக்குனரின் பதிவு