LOADING...
பிக் பாஸ் தமிழ் 9: விஜய் டிவிக்கும், விஜய் சேதுபதிக்கும் குவியும் வேண்டுகோள்கள்
இந்த நிகழ்ச்சி பெருமபாலான மக்களிடையே அதிருப்தியை சம்பாதித்து வருகிறது

பிக் பாஸ் தமிழ் 9: விஜய் டிவிக்கும், விஜய் சேதுபதிக்கும் குவியும் வேண்டுகோள்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 24, 2025
05:11 pm

செய்தி முன்னோட்டம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியின் தேர்வு பெருமபாலான மக்களிடையே அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. காரணம், இந்த சீசனின் போட்டியாளர்கள் பலர் யாரும் அறிந்திடாதவர்கள் மட்டுமல்ல, சர்ச்சையான சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள். அவர்களில் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர், அரோரா சின்க்ளேர் உள்ளிட்டவர்களும் அடக்கம். வீட்டிற்கு வந்த முதல் வாரத்திலிருந்து இந்த போட்டியாளர்கள் செய்யும் சேட்டைகளும் லீலைகளும் பார்வையாளர்களிடத்தில் எதிர்மறை விமர்சனத்தையே பெற்று வருகிறது.

விமர்சனங்கள்

போட்டியாளர்களை கண்டிக்க வேண்டும் என குவியும் விமர்சனங்கள்

சீசன் துவங்கியதிலிருந்து விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் நேயர்கள் எதிர்பார்த்த அளவிற்கு கண்டிப்பு காட்டவில்லை என விமர்சனம் எழுந்து வந்தது. அதற்கு சேனல் தரப்பில், போட்டியாளர்கள் வயது வந்தவர்கள், அவர்கள் செய்வது நாகரீகமாக இல்லை என்பதை உணராமலா அப்படி நடந்து கொள்வார்கள் என கேள்வி கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரத்தில் பிபி ஹவுசில் கம்ருதீன் சக போட்டியாளர்களை தகாத வார்த்தைகளாலும், நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டார் என பலரும் கண்டித்துள்ளனர். அதோடு திவாகர் பெண்களிடம் நடந்துகொள்ளும் முறையையும் கண்டிக்க வேண்டுமெனவும், பொதுவாக 18+ பேச்சுகள் இல்லத்தில் அவ்வப்போது நடைபெறுவதையும் VJS கண்டிக்க வேண்டுமென BB விமர்சர்கள் பலரும் கோரிக்கை எழுப்பி உள்ளனர். கேட்பாரா VJS?

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post