அடுத்த செய்திக் கட்டுரை
'குடுத்த காசுக்கு மேல நடிக்காத..': சக போட்டியாளரிடம் தக் லைஃப் காட்டிய ஸ்ருதிகா அர்ஜுன்
எழுதியவர்
Venkatalakshmi V
Oct 22, 2024
03:52 pm
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரைப்பட நடிகை ஸ்ருதிகா அர்ஜுன், ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார்.
சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த 'பிக் பாஸ் 18' இல் நிகழ்ச்சியில் அவர் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களாகி மாறியுள்ளார்.
இந்த நிலையில், இன்றைய நிகழ்வின் (அக்டோபர் 22) ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் நாமினேஷன் பொறுப்பு தரப்பட்ட ஸ்ருதிகா, சக போட்டியாளரை நாமினேட் செய்தார்.
அவினாஷ் மிஸ்ரா என்ற பெயர் கொண்ட அந்த போட்டியாளரை நாமினேட் செய்வதற்கு காரணம், அவர் உடன் உள்ளவர்களை மதிப்பதில்லை என கூறினார்.
அவினாஷ் தலையிட முயலும்போது, அவர் அசராமல் 'குடுத்த காசுக்கு நடிச்ச போதும்' என்பது போல ஹிந்தியில் கூற, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#shrutika #ShrutikaArjun #Biggboss18 https://t.co/I3If5iOAh7
— arjun raaj (@arjunraaj) October 22, 2024