விடாமுயற்சி: அஜித்குமாருக்கு வில்லனாகும் பிக் பாஸ் பிரபலம்
நடிகர் அஜித்குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. அதுமட்டுமின்றி, படத்தை பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த படத்தில், அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என்ற செய்தி கசிந்தது. இதனை தொடர்ந்து, தற்போது இப்படத்தில், பிக் பாஸ் பிரபலம் ஆரவ் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கப்போகிறார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் துபாயில் ஷூட் செய்யவுள்ளதாகவும், அதற்காக படக்குழுவினர் அங்கே குழுமியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில், ஹுமா குரேஷி மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார்களாம்.