LOADING...
பிக் பாஸ் தமிழ் 9: சன் டிவி சீரியலில் இருந்து விலகிய நடிகை வைல்டு கார்டு போட்டியாளரா?
சன் டிவி சீரியலில் இருந்து விலகிய நடிகை திவ்யா கணேஷ் பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல உள்ளதாக தகவல்

பிக் பாஸ் தமிழ் 9: சன் டிவி சீரியலில் இருந்து விலகிய நடிகை வைல்டு கார்டு போட்டியாளரா?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2025
02:38 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, ஆட்டத்தில் எதிர்பார்த்த தீவிரம் இல்லாததால், தனது முதல் பெரிய மாற்றத்திற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, பிக் பாஸ் குழுவினர் மூன்றாவது வார இறுதிக்குள் வைல்டு கார்டு போட்டியாளர்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். சமீபத்திய தகவல்களின்படி, நடிகை திவ்யா கணேஷ் வைல்டு கார்டு போட்டியாளராகப் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளார். சன் டிவியின் பிரபலமான தொடரான அன்னம் சீரியலில் இருந்து நடிகை திவ்யா கணேஷ் திடீரென விலகியது, அவர் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான காரணமாக இருக்கலாம் என்று திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

வைல்டு கார்டு

வைல்டு கார்டு போட்டியாளர்கள்

திவ்யா கணேஷின் வருகை வீட்டிற்குள் புதிய மோதல்களை உருவாக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், விஜய் டிவியின் மகாநதி சீரியலில் அவருடன் நடித்த கம்ருதீன் மற்றும் ஆதிரை ஆகிய இருவரும் ஏற்கனவே வீட்டில் போட்டியாளர்களாக உள்ளனர். கம்ருதீன் மற்றும் ஆதிரை இருவரும் தற்போது தீவிரமான சண்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, திவ்யாவின் வருகை இந்த மோதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திவ்யா கணேஷ் மட்டுமல்லாமல், நடிகர் பிரஜின் மற்றும் ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியலில் இருந்து சமீபத்தில் விலகிய சிபு சூர்யன் ஆகியோரும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக விரைவில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.