பிக் பாஸ் சீசன் 9: கடந்த வாரம் வெளியேறிய ஆதிரையின் சம்பளம் எவ்வளவு?
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளரான ஆதிரை பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மகாநதி சீரியல் நடிகையான ஆதிரை பிக் பாஸ் இல்லத்தில் ஒரு சர்ச்சையான போட்டியாளராகவே பார்க்கப்பட்டார். ஆரம்பத்தில் தனிப்பட்ட ஆட்டத்தை விளையாடிய ஆதிரை ஒரு கட்டத்திற்கு பின்னர் BB ஹவுசில் நடந்து கொண்டது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இவர் கடந்த பிக் பாஸ் போட்டியாளர் பூர்ணிமாவின் தோழி என்றும் கூறப்படுகிறது. ஆதிரை ஏற்கனவே விஜயின் பிகில் படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
அதிரையின் ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது
ஒரு நாளைக்கு சுமார் ரூ.2,000 முதல் ரூ.15,000 வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. ஆதிரை மொத்தம் 21 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். இதன் அடிப்படையில், அவர் மொத்தமாக சுமார் ₹3,15,000 (ரூபாய் மூன்று லட்சத்து பதினைந்தாயிரம்) தொகையைப் பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளார். வெளியேறிய போட்டியாளர்களில், ஆதிரை தான் அதிக சம்பளத்துடன் வெளியேறிய போட்டியாளர் என்று கூறப்படுகிறது.