LOADING...
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: முதல் வைல்ட் கார்டு கண்டெஸ்டண்டாக நுழைகிறார் நடிகை திவ்யா கணேஷ்
BB9: முதல் வைல்ட் கார்டு கண்டெஸ்டண்டாக நுழைகிறார் நடிகை திவ்யா கணேஷ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: முதல் வைல்ட் கார்டு கண்டெஸ்டண்டாக நுழைகிறார் நடிகை திவ்யா கணேஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2025
04:54 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சுவாரசியம் கூட்ட வைல்ட் கார்டு போட்டியாளர்களை களமிறக்க தயாராகி உள்ளது சேனல் தரப்பு. முதல் போட்டியாளராக சீரியல் நடிகை திவ்யா கணேஷ் உள்ளே நுழைய உள்ளார். அவர் இன்றோ நாளையோ வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகையும் மாடலுமான திவ்யா கணேஷ், தமிழ் தொலைக்காட்சி துறையில் தனது பணிக்காக மிகவும் பிரபலமானவர். குறிப்பிடத்தக்க வகையில் அவர் சன் டிவியில் ஒளிபரப்பான தமிழ் சேரியலான ​​சுமங்கலியில் நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சர்ச்சை

கம்ருதின் பற்றி திவாகரிடம் குறை கூறிய VJ பார்வதி

சென்ற வாரயிறுதி எபிசோடில் திவாகர் மீது 'பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்ற குற்றசாட்டை கம்ருதின் உட்பட ஒரு சிலர் முன்வைத்தனர். ஆனால், தங்களுக்கு அப்படி ஏதும் பயமில்லை என பெண் போட்டியாளர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பார்வதி, கம்ருதீன் மீது அத்துமீறிய நடத்தை குறித்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தோழியான பார்வதியே கம்ருதீன் மீது புகார் அளித்திருப்பது நிகழ்ச்சியில் பேசுபொருளாகியுள்ளது. கார்டன் ஏரியாவில் திவாகருடன் பேசிக்கொண்டிருந்தபோது பார்வதி இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். "அத்துமீறித் தொடுகிறார் என்பது எனக்கே ஃபீல் ஆகுது. நான் யாரிடமாவது டேட்டிங் செய்தால் கமிட்மென்ட்டோடு தான் செய்வேன். உன்னுடைய போதைக்கு நீ என்னை ஊறுகாயாகப் பயன்படுத்திக்க முடியாது," என்று அவர் வெளிப்படையாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post