
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தன்னுடைய அடுத்த சீனுக்கு தயாராகி விட்டது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு சீசனுக்கும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்தி, TRP-ஐ ஏற்றி வந்தது.
கடந்த சீசனில் 24 மணி நேர ஒளிபரப்பை துவங்கினர்.
சென்ற ஆண்டு நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 6-க்கு பிறகு, BB அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி, ப்ரெத்யேகமாக OTT நேயர்களுக்காக ஒளிபரப்பபட்டது.
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-க்கான போட்டியாளர் தேர்வு நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாயின.
இதற்கான விடையாக, இன்று இரவு 7:07 மணிக்கு, பிக் பாஸ் தமிழ் சீசன்-7 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது விஜய் டிவி
ட்விட்டர் அஞ்சல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7
Evening 7:7 மணிக்கு ரெடியா இருங்க... 😎 #VijayTelevision #VijayTV #Disneyplushotstar #VijayTakkar #VijaySuper pic.twitter.com/0peyrRm8c8
— Vijay Television (@vijaytelevision) August 18, 2023