
'பிக் பாஸ்' சீசன் 7 : அக்டோபர் 1ம் தேதி முதல் ஆரம்பம்
செய்தி முன்னோட்டம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் துவங்கவுள்ளது என்னும் அதிகாரப்பூர்வ செய்தியினை அத்தொலைக்காட்சி தற்போது இணையத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதன் க்ராண்ட் லாஞ்ச் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு துவங்கவுள்ளது.
இம்முறை இந்த நிகழ்ச்சியில் ஒரு வீடு இல்லை, இரண்டு வீடு என்று கமல் ப்ரோமோவில் கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஒரு வீட்டில் புது போட்டியாளர்களும், இன்னொரு வீட்டில் முந்தைய சீசன் போட்டியாளர்களும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பிக் பாஸ் 7
Bigg Boss Tamil Season 7 Grand Launch - அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. @ikamalhaasan @disneyplusHSTam #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/di3UPo4T8c
— Vijay Television (@vijaytelevision) September 15, 2023