Page Loader
கூமாப்பட்டி டு பிக் பாஸ் தமிழ் சீசன் 9? ரியாலிட்டி ஷோவில் தங்கபாண்டியை பங்கேற்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்
பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவில் தங்கபாண்டியை பங்கேற்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்

கூமாப்பட்டி டு பிக் பாஸ் தமிழ் சீசன் 9? ரியாலிட்டி ஷோவில் தங்கபாண்டியை பங்கேற்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 30, 2025
01:12 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ள கூமாப்பட்டி தங்கபாண்டி பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இல் பங்கேற்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான கூமாப்பட்டியில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியிட்டு வரும் தங்கபாண்டி, தற்போது ஒரு வீடியோ மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அவரது தனித்துவமான வசனமான "ஏங்க கூமப்பட்டிக்கு வாங்க" அவரை நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாற்றியுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் கூட பலரும் அறியாத அவரது கிராமத்தை தற்போது உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது.

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9

பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது தனித்துவமான கோஷம் மூலம் பிரபலமடைந்த ஜூலிக்கு வாய்ப்பு கிடைத்தது போல், இந்த சீசனில் தற்போது திடீர் பிரபலமாகியுள்ள தங்கபாண்டியனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிகிறது. சமயம் தமிழ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவிஷ அறிவிப்பும் இல்லை. அதே நேரத்தில், பார்வையாளர்களை ஈர்க்க தங்கபாண்டியின் வெகுஜன ஈர்ப்பைப் பயன்படுத்த பிக் பாஸ் குழு ஆர்வமாக இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.