Page Loader
பிக் பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு திருமணம்; உமா ரியாஸ் பகிர்ந்த புகைப்படம்
அவருடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்யவுள்ளார்

பிக் பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு திருமணம்; உமா ரியாஸ் பகிர்ந்த புகைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2024
07:29 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 2 ஆம் சீனில் கலந்து கொண்டவர் ஷாரிக். இவர் பிரபல நடிகர் ரியாஸ் கான் மற்றும் நடிகை உமா ரியாஸின் மூத்த மகனாவார். இவரும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷாரிக்கும், அப்பா ரியாஸ் கான் போலவே உடலை பேணுவதில் ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில், அவர் அவருடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்யவுள்ளார் என செய்திகள் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக தாய் உமா ரியாஸ், ஷாரிக் மற்றும் அவரது காதலி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கூடவே நெருங்கிய சொந்தங்களோடு ஆகஸ்ட் 8ம் தேதி தனது மகன், தன்னுடைய தேவதையை கரம்பிடிக்கவுள்ளதாக கூறியுள்ளார் உமா ரியாஸ்.

ட்விட்டர் அஞ்சல்

பிக் பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு திருமணம்