என்ன வச்சு ஃபேமஸ் ஆக பாக்குறாங்க என புலம்பிய வாட்டர்மெலன் ஸ்டார்; இன்றைய பிக் பாஸ் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் வழக்கமான எவிக்ஷன் அறிவிப்புகளுக்குப் பதிலாக, போட்டியாளரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மற்றொரு போட்டியாளரான கானா வினோத் மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்த சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திவாகரின் இந்தப் புகார்களைக் கேட்ட பார்வையாளர்கள், பிக் பாஸ் வீட்டில் வினோத் - திவாகர் காம்போ பிரிந்துவிட்டதாகக் கருதுகின்றனர். நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதியிடம் பேசிய திவாகர், வினோத்தின் நடவடிக்கை மிகவும் சீப்பாக இருப்பதாகப் புகார் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
குற்றச்சாட்டு விபரம்
விஜய் சேதுபதியிடம், "தினமும் இரவு நன்றாகத் தூங்கும்போது, என் தூக்கத்தைக் கெடுக்கும் விதமாகத் தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறார் சார். இது மிகவும் மோசமான நடத்தை. என்னை வைத்து ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே வம்பிழுக்கிறார்." என்று திவாகர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, "திவாகர் ஜாலியாக இருக்கிறார், ஃபன்னாக இருக்கிறார் என்று அவர் மீது அட்வான்டேஜ் எடுத்துக்கொள்வதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது சரியில்லை." என்று வினோத்தின் நடவடிக்கையைக் கண்டித்தார். இதற்கிடையில், திவாகரின் நடவடிக்கை பெண் போட்டியாளர்களிடம் மோசமாக இருப்பதாகப் புகார் எழுந்தபோது, அவர்கள் பாதுகாப்பாக உணர்வதாகக் கூறியதால், பார்வையாளர்கள் மேலும் குழப்பமடைந்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Day21 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 26, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/C2xPw0sZfk