LOADING...
பிக் பாஸ் 9 மகுடத்தை சூடியது யார்? திவ்யா கணேசன் ஆர்மி கொண்டாட்டம்; வின்னர், ரன்னர் லிஸ்ட் இதோ
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வின்னர் மற்றும் ரன்னர் பட்டியல்

பிக் பாஸ் 9 மகுடத்தை சூடியது யார்? திவ்யா கணேசன் ஆர்மி கொண்டாட்டம்; வின்னர், ரன்னர் லிஸ்ட் இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Jan 18, 2026
07:24 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) கோலாகலமான கிராண்ட் பினாலேவுடன் (Grand Finale) நிறைவடைகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த சீசன், ஆரம்பம் முதலே பல சர்ச்சைகள், மோதல்கள் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஒளிபரப்பானது. 100 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், இன்று இறுதிப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்ட 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கானா வினோத் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் இறுதிப்போட்டியில் மொத்தம் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.

பட்டியல்

பிக் பாஸ் 9 வின்னர் மற்றும் ரன்னர் பட்டியல்

அவர்கள் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட, இறுதியில் யார் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியது. இறுதிப்போட்டியின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், வெற்றியாளர்களின் விவரம் இதோ: டைட்டில் வின்னர்: நடிகை திவ்யா கணேசன். சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு மக்கள் அதிக வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். முதல் ரன்னர்: சபரி. திவ்யாவுடன் கடும் போட்டி கொடுத்த இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3 ஆம் இடம்: விக்ரம். 4 ஆம் இடம்: அரோரா.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் தொகுப்பு

இந்த சீசன் முழுவதும் விஜய் சேதுபதி தனது தனித்துவமான பாணியில் போட்டியாளர்களைக் கையாண்ட விதம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் அவர் கேட்கும் கேள்விகள் மற்றும் போட்டியாளர்களுக்கு அவர் கூறும் அறிவுரைகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. நடிகர் கமல்ஹாசனுக்குப் பிறகு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழிநடத்திச் சென்றதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement