பிக் பாஸ் 10 வைல்டு கார்டு எண்ட்ரி: டிடிஎஃப் வாசனுடன் களமிறங்கும் 2 பேர் யார்?
செய்தி முன்னோட்டம்
தமிழ் சின்னத்திரையின் முன்னணி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி, கடந்த செப்டம்பர் 6 அன்று தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வார இறுதியில் லீடர் எக்ஸிட் முறையில் வெளியேறிய 3 போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து ஆட்டம் சூடுபிடித்தது. உள்ளே சென்றவர்கள் மற்ற போட்டியாளர்களுடன் கைகளைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையால் அஸ்மிதா மற்றும் சாவின்யா இடையே கடுமையான வாக்குவாதங்கள் வெடித்தன. இந்த 6 பேரில் குமரன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய நிலையில், லட்சுமி பிரியா சேவ் செய்யப்பட்டுள்ளார். இதனால் எஞ்சியுள்ள அஸ்மிதா, சாவின்யா, ஜாவித், தன்யா ஆகிய நால்வரில் இருவர் டபுள் எவிக்ஷன் முறையில் வெளியேற உள்ளனர்.
வைல்டு கார்டு என்ட்ரி
டிடிஎஃப் வாசன் வருகையால் எகிறும் எதிர்பார்ப்பு
பிக் பாஸ் வீட்டில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்க 3 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைகின்றனர்.
பிரபல யூடியூபரும் நடிகருமான டிடிஎஃப் வாசன் முதன்மை வைல்டு கார்டு போட்டியாளராகக் களம் காண்கிறார்.
இவருடன் ஏற்கனவே உள்ள போட்டியாளர் அவினாஷின் தங்கை அக்ஷிதா மற்றும் காமன்மேன் பிரிவில் தேர்வான கரிஷ்மா ஆகியோரும் புதிய போட்டியாளர்களாக அடியெடுத்து வைக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள டிடிஎஃப் வாசனுக்குப் பேசப்பட்டுள்ள பெரிய சம்பளம் மற்றும் அவரது வருகை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய வரவுகளால் பிக் பாஸ் வீட்டுக்குள் கூட்டணிகளும் வியூகங்களும் முற்றிலும் புதிய திருப்பத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.