Page Loader
பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது? 
திருமணம் எப்போது என ரசிகர்களிடம் உரையாடி நடிகை ஷெரின்

பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது? 

எழுதியவர் Siranjeevi
Apr 21, 2023
03:42 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் சினிமாவில் 2௦௦௦ தொடக்கத்தில், ஒரே படத்திலேயே லட்சகணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார் நடிகை ஷெரின். நடிகர் தனுஷுடன் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமானவர், தமிழ் திரையுலகில் பெரிதாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடுத்ததாக, விசில் படத்தில் வில்லியாக நடித்தாலும், அந்த படத்தில் வரும் அழகிய அசுரா பாடல் மேலும் பிரபலமானார். ஒரு சில படங்களில் நடித்த அவர் திடீரென்று காணாமல் போனார். பின்னர், பல ஆண்டுகளுக்குப்பின் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக முன்னேறினார். அதன் பின்னர், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக்கி வந்தார். இடையில், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக உள்ளார் ஷெரின்.

பிக்பாஸ் ஷெரின்

திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் ஷெரின் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

பிக் பாஸ் வருவதற்கு முன்பு, லிவின் உறவில் ஏற்பட்ட விரிசல் ஏற்பட்டது. தற்போது வரை சிங்கிளாக இருக்கும், 37 வயதாகும் ஷெரின் திருமணம் செய்யவில்லை. பிக் பாசில் கலந்து கொண்ட நாட்களில் உடல் மெலிந்து, மீண்டும் அழகிய அசுரா ஷெரின் தோற்றத்தில் கிறங்கடிக்கிறார். சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது, திருமணம் பற்றி ரசிகர் ஒருவர் கேட்க, என்னுடைய ஜாதகம் படி அக்டோபரி திருமணம் நடக்கும் என கூறியுள்ளார்கள் என்று தெரிவித்தார். ஆனால், இன்ஸ்டாவில், ஷெரினுக்கு அடுத்த மாதம் திருமணம் என வந்துள்ளது. கூடிய சீக்கிரமே என்னுடைய திருமணத்தை முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஷெரின் விரைவில் திருமண செய்தியை அறிவிப்பார் எனக்கூறப்படுகிறது.