KH234 படத்தின் போஸ்டரில் இருக்கும் பாரதியார் கவிதை
இயக்குனர் மணிரத்தினமும், கமலஹாசனும் 'நாயகன்' திரைப்படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்குப் கழித்து, 'கமல்234' படத்திற்காக இணைகிறார்கள். இத்திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் 'மிரர் இமேஜ்' முறையில் எழுதப்பட்டிருந்த பாரதியார் கவிதை தற்போது கவனம் வைத்துள்ளது. கடந்த 1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்பிரமணிய பாரதியார் நடத்தி வந்த "சுதேசமித்திரன்" இதழில் இந்த கவிதை வெளியிடப்பட்டது. காலனை எதிர்த்து பாரதி பாடுவது போல் இந்த கவிதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மரணம் குறித்து பயம் ஏதும் இல்லாத பாரதி, காலனை எட்டி மிதித்து பந்தாட வேண்டி அழைக்கிறார். மேலும் இந்த கவிதையில் பாரதி, முருகன், எம்பெருமாள் உள்ளிட்டோரை புகழ்ந்து, காலனை எதிர்ப்பது போன்று பாடியுள்ளார்.
கமல் பட போஸ்டரில் இடம் பெற்றுள்ள பாரதியார் கவிதை
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன் மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்தன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ, கெட்ட மூடனே? ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு நாலாயிரம் காதம் விட்டகல்! உனை விதிக்கிறேன்-ஹரி நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன் காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன். என்ற கவிதை கமல்ஹாசன் பட போஸ்டரில் மிரர் இமேஜில் இடம்பெற்றுள்ளது.