Loading...
சூப்பர் ஹீரோ பைக் வேணுமா? ரூ.10 கோடிக்கு ஏலத்திற்கு வரும் பேட்மேன் 'Batpod'
ரூ.10 கோடிக்கு ஏலத்திற்கு வருகிறது பேட்மேன் 'Batpod'

சூப்பர் ஹீரோ பைக் வேணுமா? ரூ.10 கோடிக்கு ஏலத்திற்கு வரும் பேட்மேன் 'Batpod'

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2026
04:50 pm

செய்தி முன்னோட்டம்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிறிஸ்டியன் பேல் பேட்மேனாக நடித்த தி டார்க் நைட் மற்றும் தி டார்க் நைட் ரைஸஸ் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பேட்பாட் (Batpod) எனப்படும் மோட்டார் சைக்கிள் ஏலத்திற்கு வந்துள்ளது. தி பீஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த வாகனம் சுமார் £9,00,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹10 கோடி) வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படப் பொருட்களின் ஏல அமைப்பான ப்ராப்ஸ்டோர் மூலமாக இந்த புதிய ஏலம் நடத்தப்படுகிறது.

ஹோண்டா எஞ்சின்

வடிவமைப்பு சவால்களும் 750cc ஹோண்டா எஞ்சின் திறனும்

இயக்குநர் நோலன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் நார்தன் குரோலி ஆகியோரால் இப் பேட்பாட் மோட்டார் சைக்கிள் முதன்முதலில் கருத்தியலாக உருவாக்கப்பட்டது.

பின்னர் ஆஸ்கார் விருது வென்ற காட்சிப் பிழை கலைஞரான கிறிஸ் கொர்வோல்ட் என்பவரால் 750cc ஹோண்டா எஞ்சின் மற்றும் 31 இன்ச் பிரம்மாண்ட டயர்களுடன் இது நிஜ வாகனமாக மாற்றப்பட்டது.

இந்த பைக்கை ஓட்டுவது நடிகர்களுக்கும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் மிகவும் சவாலான ஒன்றாக இருந்ததாகவும், படப்பிடிப்பின் போது கட்டுப்பாட்டை இழந்து கேமரா மீது மோதிய சம்பவங்களும் நடந்துள்ளன.

வார்னர் பிரதர்ஸ்

வார்னர் பிரதர்ஸ் வெளியிட்ட ஒரே அதிகாரப்பூர்வ பேட்பாட் வாகனம்

திரைப்பட படப்பிடிப்பிற்காக மொத்தம் 6 பேட்பாட் வாகனங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும், வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோஸால் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு ரிலீஸ் செய்யப்பட்ட ஒரே வாகனம் இது மட்டுமேயாகும்.

இதன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சினிமா வரலாற்றில் பெற்றுள்ள முக்கியத்துவம் காரணமாக உலகளாவிய சேகரிப்பாளர்களிடையே இந்த பைக்குக்கு கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது ஆன்லைன் மூலமாக ஏலப் புள்ளிகள் கோரப்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் 4 அன்று லண்டனில் நடைபெறும் நேரடி ஏலத்தில் இறுதி வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

ADVERTISEMENT

நினைவுப் பொருட்கள்

பேட்மேன் ஆடை உட்பட ஏலத்தில் இடம் பெறும் பிற நினைவுப் பொருட்கள்

இந்த பேட்பாட் வாகனத்துடன் சேர்த்து பல்வேறு புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட பொருட்களும் ஏலத்திற்கு வந்துள்ளன.

குறிப்பாக 2005-ல் பேட்மேன் பிகின்ஸ் படத்தில் கிறிஸ்டியன் பேல் அணிந்த ஆடை மற்றும் 1995-ல் பேட்மேன் ஃபார் எவர் படத்தில் வால் கில்மர் அணிந்த ஆடை ஆகிய இரு முழு பேட்மேன் உடைகளும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இண்டியானா ஜோன்ஸ் தொப்பி, கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் ஜான் ஸ்னோ பயன்படுத்திய வாள் மற்றும் ஃப்ரெடி க்ரூகரின் கையுறை ஆகியவையும் இதில் அடங்கும்.

ADVERTISEMENT