ஜெயிலர் 2 திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சென்ற ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'ஜெயிலர்'.
இப்படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்க திட்டமிட்டுள்ளதாக அப்போது செய்திகள் கசிந்தன.
எனினும் தற்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக அவர் நெல்சன் உடன் ஜெயிலர் -2 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜெயிலர் திரைப்படத்தில், ஷிவ்ராஜ்குமார், மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷராஃப் ஆகியோர் நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே முதல் பாகத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் கால்ஷீட் காரணமாக அவர் நடிக்கமுடியாது போனதால், இப்படத்திற்கு உடனே சம்மதித்து உள்ளாராம்.
embed
ஜெயிலர் 2 படத்தில் பாலையா
#Jailer2 -- - The pre-production works of Jailer 2 will start from this month - #balayya is in talks to play the Important role in Rajinikanth's Jailer 2.✍️ - As for the shooting of this film, it will start this year end or early next year.💥 pic.twitter.com/id4m5Jvgk2— Kollywoodtoday (@Kollywoodtoday) June 5, 2024