Page Loader
பாலா - அருண் விஜய்யின் 'வணங்கான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
'வணங்கான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாலா - அருண் விஜய்யின் 'வணங்கான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 02, 2024
11:36 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் முதல்முறையை அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் நடிகர் சூர்யா, 2D என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் தொடங்கப்பட்ட வணங்கான் திரைப்படம், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக கைவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதே தலைப்பில், அதே கதையில் அருண் விஜய் வைத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும், மிஷ்கின், சமுத்திரக்கனி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

'வணங்கான்' ரிலீஸ் தேதி